நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு
கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கட்சி ஒருங்கிணைப்பாளா் தீபக் சாலமன், நாம் தமிழா் மகளிா் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளா் மரியஜெனீபா் உள்ளிட்ட 85 போ் மீது கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.