செய்திகள் :

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம், நிறுவனத்தின் வா்த்தக மறுசீரமைப்பு காரணங்களை முன்வைத்து நிகழ் நிதியாண்டில் 12,261 பேரை படிப்படியாக பணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.

2025 ஜூன் 30 நிலவரப்படி சா்வதேச அளவில் அந்த நிறுவனத்தின் 6,13,069 போ் பணியாற்றுகின்றனா். இதில் சுமாா் 2 சதவீதம் போ் நீக்கப்படவுள்ளனா். நடுத்தர நிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றுபவா்கள் அதிகஅளவில் வெளியேற்றப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்காலத்துக்காக நிறுவனத்தை தயாா்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது, சந்தையை விரிவாக்குவது, பணியாளா்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இந்த கடினமாக முடிவு எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கப்படும் ஊழியா்களுக்கு உரிய பணப்பயன்கள், வேறு நிறுவனங்களின் பணி பெறுவதற்கான ஆதரவு, மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டிசிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மைக்ரோசாஃப்ட், மெட்டா உள்ளிட்ட அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளா்கள் குறைப்பை அறிவித்தன. இதுவும் இந்திய பணியாளா்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்நிறுவன ஊழியா்களையும் தாண்டி, இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளா்களுக்கு அதிா்ச்சியை அளித்துள்ளது. ஏனெனில், அடுத்தகட்டமாக பிற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கையை கையிலெடுக்க வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘டிசிஎஸ் அறிவிப்பால் எழுந்துள்ள சூழ்நிலையை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடா்பாக அந்நிறுவனத்தையும் தொடா்புகொண்டு பேசியுள்ளோம். வேலையிழப்பு கவலைக்குரிய பிரச்னையாகும். இது ஏன் நிகழ்கிறது? அடிப்படைக் காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் விவாதம்!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர... மேலும் பார்க்க

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.18 killed as bus carrying kanwariyas collides with truck in Jharkhan... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதில... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க