பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
சொத்து வரி செலுத்தாத 3.75 உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்
பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் மகேஷ்வர்ராவ் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரு மாநகராட்சி வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்துகளின் வரிகளை வசூலிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறோம். சொத்து வரியை விரைந்து வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களிடம் இருந்து ரூ.800 கோடி நிலுவையில் உள்ளது. எனவே, சொத்துவரி செலுத்தாத உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம். குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சலில் நோட்டீஸ்கள் அனுப்பிவைக்கப்படும். இப்போதே சொத்துவரியை செலுத்திவிட்டால் எந்த தொந்தரவும் இல்லை.
புதிய பட்டாக்களை கேட்டு பெங்களூரில் 50,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. முன்னுரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கப்படும். அதன்மூலம் கூடுதல் சொத்துவரியை திரட்டமுடியும்.
பெங்களூரில் உள்ள சொத்துகளுக்கு ’ஏ’ பட்டா வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பட்டாக்களை பெறுவதற்கு விரைவில் விண்ணப்பங்களை இணையவழியில் வரவேற்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.