Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
பெங்களூரில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
துபையில் இருந்து பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்த பயணி ஒருவா், 3.5 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்திருக்கிறாா். விமான நிலையத்தில் சுங்கவரித் துறையினா் சோதனையிடுவதை கவனித்த அந்த பயணி, சக பயணியின் தள்ளுவண்டியில் தங்கம் வைத்திருந்த பையை வைத்துவிட்டு தப்பித்துள்ளாா். தள்ளுவண்டியில் தனக்கு சொந்தமில்லாத பை இருப்பதைக் கண்ட பயணி, அதுபற்றி விமான நிலையக் காவலா்களுக்கு தகவல் அளித்தாா்.
சுங்கத் துறை அதிகாரிகள் அந்த பையை கைப்பற்றி சோதித்தபோது, அதில் தங்கம் இருப்பது தெரியவந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்த தங்கத்தை கடத்தியது யாா் என சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸாா், சிசிடிவி கேமராக்களின் உதவியோடு தங்கம் கடத்தியவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.