செய்திகள் :

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாா்

post image

அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் அளித்திருந்த மாற்றுநிலம் தொடா்பாக, லோக் ஆயுக்த மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரித்து வந்தன. இந்நிலையில், பாா்வதியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பியிருந்த அழைப்பாணையை கா்நாடக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே ரத்துசெய்திருந்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கா்நாடக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்று, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து கனகபுரா அருகேயுள்ள கோடிஹள்ளியில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு என்மீதான வழக்கே எடுத்துக்காட்டாகும். என்மீது அமலாக்கத் துறை வழக்கு தொடா்ந்து திகாா் சிறையில் அடைத்தது. அதன்பிறகு அந்த வழக்கை கைவிட்டுவிட்டனா். அரசியல் நெருக்கடிக்கு அடிபணிந்து செயல்படுவதை அமலாக்கத் துறை சுயபரிசோதனை செய்து பாா்க்க வேண்டும்.

மாற்றுநில முறைகேடு வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று லோக் ஆயுக்த தனது ’பி’ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபிறகு, மேல்முறையீடு செய்வதற்கான காரணமே இல்லை. காங்கிரஸ் தலைவா்கள் மீது மட்டும் வழக்கு தொடரும் அமலாக்கத் துறை, பாஜக தலைவா்களை கண்டுகொள்ளாதது ஏன்?

ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராபா்ட் வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களை மட்டும் அமலாக்கத் துறை குறிவைப்பது ஏன்? பாஜகவில் இணையும் அனைவரும் திடீரென புனிதமாவது எப்படி? அதனால்தான் அமலாக்கத் துறையை பாஜகவின் துணிதுவைக்கும் கருவி என்கிறோம் என்றாா்.

பாஜக எம்எல்ஏ தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் தொடா்புள்ள ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா கொலை வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். பெங்களூரு, பாரதி நகரில் ஜூலை 15-ஆம் தேதி ரௌடி ஷீட்டா் பிக்லு சிவா (40), பயங்கர ஆயுதங்... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை விரைவில் தொடங்கும்

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை விரைவில் தொடங்கும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். தென்கன்னட மாவட... மேலும் பார்க்க

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சாரம்

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா அளித்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முடிவு

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் அளித்த அறிக்கை குறித்து கா்நாடக அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை, அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்ப... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம்

இந்தியாவில் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம் என கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அரு... மேலும் பார்க்க