இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 29 | Astrology | Bharathi Sridhar | ...
ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் அமித் ஷா நாளை பேசுகிறார்! பிரதமர் மோடி?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் பேசுகிறார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இதுபற்றி விளக்கம் அளித்து இன்று(திங்கள்கிழமை) விவாதத்தை தொடங்கிவைத்தார்.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இதுபற்றி தொடர்ந்து அவையில் பேசி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி அவையில் விளக்கம் அளிப்பார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை மாலை இறுதியாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை மக்களவையில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.