இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 29 | Astrology | Bharathi Sridhar | ...
உலகக் கோப்பை செஸ்: திவ்யா, ஹம்பிக்கு மோடி வாழ்த்து!
மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் சாம்பியன் திவ்யா தேஷ்முக் மற்றும் இரண்டாமிடம் பிடித்த கோனெரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டை-பிரேக்கா் சுற்றில், இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக் மற்றும் கோனெரு ஹம்பி ஆகியோர் இன்று மோதினர்.
இதில், ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா, இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில், இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,
“இரண்டு சிறந்த இந்திய செஸ் வீராங்கனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் செஸ் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக் வென்றிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக வாழ்த்துகள். இது பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.
கோனெரு ஹம்பி இந்த தொடர் முழுவதும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். இரு வீராங்கனைகளின் எதிர்காலத்துக்காக வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் தொடரில் இரண்டு இந்திய செஸ் வீராங்கனைகள் மோதிக்கொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.