தலைவன் தலைவி அதிகாரப்பூர்வ வசூல்!
தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெலுங்கில் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.
தற்போது, இப்படத்திற்கான திரைகளும் காட்சிகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அங்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைவன் தலைவி திரைப்படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை என்பதால் இப்படம் இந்த வார முடிவில் ரூ. 60 கோடியைக் கடக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: காப்புரிமை வழக்கு... இளையராஜா மனு தள்ளுபடி!