கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேச...
காப்புரிமை வழக்கு... இளையராஜா மனு தள்ளுபடி!
இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை வழக்கிற்காக அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களை அனுமதி பெறாமல் திரைப்படங்களில் பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார்.
அதேநேரம், சில பாடல்களின் உரிமம் பிரபல இசை நிறுவனங்களிடம் இருப்பதால் தயாரிப்பாளர்கள் நேரடியாக அந்நிறுவனங்களைத் தொடர்பு கொள்கின்றனர்.
இதனால், இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவது தொடர்பாக பல குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன.
இளையராஜா இசையமைத்த பாடல்களில் 536 ஆல்பங்கள் சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் உள்ளது. இதில், 22 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும் இதனால் சோனி மியூசிக் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் இளையராஜா மீது குற்றச்சாட்டு வைத்தனர்.
இதன் காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு சோனி மியூசிக் நிறுவனம் இளையராஜா மீது காப்புரிமையை மீறியதற்கான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
தற்போது, மும்பையில் நடைபெறும் வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி இளையராஜா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.