செய்திகள் :

Divya Deshmukh: "இறுதிப்போட்டியை வரலாறாக மாற்றிய இந்தியப் பெண்கள்" - ராகுல் காந்தி வாழ்த்து

post image

ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்று, உலக சாம்பியன் ஆன முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் திவ்யா தேஷ்முக்.

இறுதிப்போட்டியில் மற்றொரு இந்தியரான கோனேரு ஹம்பியை வீழ்த்தியிருக்கிறார். இந்தப் போட்டி தொடங்கும் முன்னரே இந்தியப் பெண் ஒருவர் சாதனைப் படைப்பது உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திவ்யா மற்றும் கோனேரு ஆகிய இருவரும் 2024 செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் முக்கியப் பங்கு வகித்திருந்தனர். இன்றைய வெற்றியைத் தொடர்ந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது பெண் திவ்யா தேஷ்முக்-வுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

"Divya Deshmukh-ஐ நினைத்துப் பெருமையடைகிறேன்" - மோடி

அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு சிறந்த இந்திய செஸ் வீராங்கனைகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப்போட்டி!

2025 ஆம் ஆண்டுக்கான FIDE மகளிர் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை நினைத்துப் பெருமையடைகிறேன். பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது இந்தக் குறிப்பிடத்தக்கச் சாதனைக்காக வாழ்த்துகிறேன்.

இந்த சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் கோனேரு ஹம்பி அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்.

இரண்டு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்" எனப் பாராட்டியுள்ளார்.

"19 வயதில் மிகப் பெரிய சாதனை" - ராகுல் காந்தி

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "ஒரு உலக மேடையில் இரண்டு இந்தியப் பெண்கள். இந்த நாடு பெருமையால் ஒளிவீசுகிறது.

FIDE சதுரங்க உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்ணாக 19 வயதில் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளார் திவ்யா தேஷ்முக். கோனேரு ஹம்பி, ஒரு லெஜண்ட். இந்தியர்கள் மட்டுமே விளையாடிய இந்தப் போட்டியை வரலாறாக மாற்றியிருக்கிறார்.

இரண்டு சாம்பியன்களுக்கும் வாழ்த்துகள்" எனத் தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின் போது பும்ரா 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்... மேலும் பார்க்க

"கிரேட் அமெரிக்கன் ஐகான்" - மறைந்தார் 90s கிட்ஸ்களின் WWE நாயகன் ஹல்க் ஹோகன்; பிரபலங்கள் இரங்கல்

இன்று மிகப் பிரபலமாக இருக்கும் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE-ஐ 1980-களில் மக்களிடத்தில் பிரபலமாக கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஹல்க் ஹோகன்.Horseshoe Mustache லுக்கில் ர... மேலும் பார்க்க

'ரிஷப் பண்ட் வலியால துடிச்சாரு; அவரால ஆட முடியலன்னா?’ - என்ன சொல்கிறார் சாய் சுதர்சன்?

'நான்காவது போட்டி...'இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்... மேலும் பார்க்க

``விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பது எவ்வளவு?" - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'ஸ்டிக் டு கிரிக்கெட்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.அந்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் ந... மேலும் பார்க்க

MS Dhoni: ``என் மகளும் இப்படிதான்.." - உடற்பயிற்சி மீதான இந்தியர்களின் ஆர்வமின்மை குறித்து தோனி கவலை

இந்தியாவில் உடற்பயிற்சி செய்பவர்களின் அளவு குறைந்து வருகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தெரிவித்திருக்கிறார்.ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அது தோனி தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களுக்... மேலும் பார்க்க

Harbhajan: `என் அப்பாவை அடித்த உங்களுடன் பேசமாட்டேன்' - ஶ்ரீசாந்த் மகள் பற்றி எமோஷனலான ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது 2008 ஐபிஎல்லில் ஶ்ரீசாந்துடனான சண்டைதான் எனக் கூறியுள்ள... மேலும் பார்க்க