செய்திகள் :

"கிரேட் அமெரிக்கன் ஐகான்" - மறைந்தார் 90s கிட்ஸ்களின் WWE நாயகன் ஹல்க் ஹோகன்; பிரபலங்கள் இரங்கல்

post image

இன்று மிகப் பிரபலமாக இருக்கும் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE-ஐ 1980-களில் மக்களிடத்தில் பிரபலமாக கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஹல்க் ஹோகன்.

Horseshoe Mustache லுக்கில் ரிங்கிற்குள் நுழைந்து பனியனை கிழிக்கும் அவரின் ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரின் உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போல்லியா.

Hulk Hogan - ஹல்க் ஹோகன்
Hulk Hogan - ஹல்க் ஹோகன்

ஆனாலும், WWE-ல் ஹல்க் ஹோகனாக ரசிகர்களைக் கவர்ந்த இவர், தனது உண்மையான பெயரைப் பலரும் மறக்குமளவுக்கு ஹல்க் ஹோகனாகவே அனைவர் மனதிலும் பதிந்துவிட்டார்.

தனது தொழில்முறை குத்துச்சண்டையில் (WWF/WWE) 12 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஹல்க் ஹோகன் 90s கிட்ஸ்களின் ஆஸ்தான WWE நாயகன்.

WWE-ல் மிகப்பெரிய கவுரமாகப் பார்க்கப்படும் ஹால் ஆஃப் ஃபேமில் 2005-ல் சேர்க்கப்பட்ட ஹல்க் ஹோகன் 2012-ல் தனது 35 வருட குத்துச்சண்டை கரியருக்கு முழுக்கு போட்டார்.

அதன்பிறகு, 2020-ல் மீண்டும் ஒருமுறை WWE ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.

ஹல்க் ஹோகன் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

Hulk Hogan - ஹல்க் ஹோகன்
Hulk Hogan - ஹல்க் ஹோகன்

இந்த நிலையில், ஹல்க் ஹோகன் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவுக்கு அமெரிக்கப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

WWE தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "WWE ஹால் ஆஃப் ஃபேம் ஹல்க் ஹோகன் காலமானார் என்பதை அறிந்து WWE வருந்துகிறது.

பாப் கலாச்சாரத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய நபர்களில் ஒருவரான ஹல்க் ஹோகன், 1980-களில் WWE உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார்.

இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு WWE தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று பதிவிட்டிருக்கிறது.

அதேபோல், அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் ஜே.டி. வான்ஸ், "ஹல்க் ஹோகன் கிரேட் அமெரிக்கன் ஐகான்.

உண்மையில் நான் சிறுவயதில் போற்றிய மனிதர்களில் ஒருவர் இவர்.

கடைசியாக அவரைப் பார்த்தபோது, அடுத்த முறை பார்க்கும்போது ஒன்றாக பீர் குடிப்போம் என்று நாங்கள் உறுதியளித்தோம்." என்று ட்வீட் செய்து ஆன்மா சாந்தியடையுமாறு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Hulk Hogan - ஹல்க் ஹோகன்
Hulk Hogan - ஹல்க் ஹோகன்

மேலும், ஹல்க் ஹோகனுடன் WWE-ல் சண்டையிட்ட ரிக் ஃப்ளைர், ட்ரிபிள் ஹெச் உள்ளிட்ட பலரும் அவருடனான நினைவுகளைக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹல்க் ஹோகனின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'ரிஷப் பண்ட் வலியால துடிச்சாரு; அவரால ஆட முடியலன்னா?’ - என்ன சொல்கிறார் சாய் சுதர்சன்?

'நான்காவது போட்டி...'இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்... மேலும் பார்க்க

``விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பது எவ்வளவு?" - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'ஸ்டிக் டு கிரிக்கெட்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.அந்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் ந... மேலும் பார்க்க

MS Dhoni: ``என் மகளும் இப்படிதான்.." - உடற்பயிற்சி மீதான இந்தியர்களின் ஆர்வமின்மை குறித்து தோனி கவலை

இந்தியாவில் உடற்பயிற்சி செய்பவர்களின் அளவு குறைந்து வருகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தெரிவித்திருக்கிறார்.ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அது தோனி தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களுக்... மேலும் பார்க்க

Harbhajan: `என் அப்பாவை அடித்த உங்களுடன் பேசமாட்டேன்' - ஶ்ரீசாந்த் மகள் பற்றி எமோஷனலான ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது 2008 ஐபிஎல்லில் ஶ்ரீசாந்துடனான சண்டைதான் எனக் கூறியுள்ள... மேலும் பார்க்க

Praggnanandhaa: நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்... மேலும் பார்க்க

Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவருடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து கொள்வதாக அறிவித்திருக்கிறார். சாய்னா நேவாலுக்கும், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபள்ளி காஷ்யபுக்கும் கடந்த 2018-ம்... மேலும் பார்க்க