MS Dhoni: ``என் மகளும் இப்படிதான்.." - உடற்பயிற்சி மீதான இந்தியர்களின் ஆர்வமின்மை குறித்து தோனி கவலை
இந்தியாவில் உடற்பயிற்சி செய்பவர்களின் அளவு குறைந்து வருகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தெரிவித்திருக்கிறார்.
ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அது தோனி தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வயதைக் கடந்த நிலையிலும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்.
ஓய்வுக்குப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் உடல் கொடுக்கும் ஒத்துழைப்பும் உடற்பயிற்சிகளும் டயட் முறைகளும்தான்.

இது தொடர்பாக நேற்று (ஜூலை 21) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தோனி, ``இப்போதெல்லாம் ஆயுள் காலம் குறைந்து வருகிறது. உடல் செயல்பாடுகளின் அளவு குறைந்து வருகிறது. அதனால், இந்தியர்களாகிய நமது சராசரி உடற்பயிற்சி, உடற்செயற்பாடுகள் குறைந்துவிட்டன.
என் மகளும் கூட... அவள் அதிக உடல் செயல்பாடுகளைச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். நம்மில் நிறையப் பேர் விளையாடுவதில்லை. என் மகளும் விளையாட்டில் ஈடுபடுவதில்லை. எனவே (உடல் ரீதியாக) சுறுசுறுப்பாக இருக்கும் விஷயங்களை நாம் திட்டமிட வேண்டும். அதற்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...