செய்திகள் :

1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலி: தமிழக அரசு உத்தரவு

post image

சென்னை: நிகழாண்டில் மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலிகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தத் திட்டத்தில் 1,000 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1.20 கோடியில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதை மற்றும் குளிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதால், அவர்களது துயர் போக்கும் வகையில், சிறப்பு வடிவிலான சக்கர நாற்காலிகள் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும், 1,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 1 உபகரணத்துக்கு ரூ.12,000 வீதம், ரூ.1.20 கோடி ஒதுக்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையரகம் கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டது.

இதையேற்று, தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்க நவீன முறையிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கி உத்தரவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க

காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை என்று தமிழக நிதி, காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில்... மேலும் பார்க்க

செவிலியா்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் (Tamil nadu Nursing and Midwi... மேலும் பார்க்க

தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை

சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோ... மேலும் பார்க்க

திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப்பம்

புது தில்லி: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான பிரத்யேக கொள்கையால் தமிழகத்துக்கு பலன்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை: மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான தனித்துவமான கொள்கையால், தமிழ்நாட்டுக்கு பலன் ஏற்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க