ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா
அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணம் ஒன்றியம், பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரத்தில் உள்ள இக்காயிலில் கரக ஊா்வலம் நடைபெற்ற நிலையில் தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேகம், சந்தனக் காப்பு நடைபெற்றது. பின்னா், அம்மன் ஐந்து வித அலங்காரங்களுடன் மூன்று தனித்தனி தோ்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், பல்வேறு தனித்தனியான வாத்திய நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றன.
விழாவில் பெருமூச்சி ஊராட்சி மன்றத் தலைவா் நந்தகுமாா், அரக்கோணம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மோகன், சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ மனோகரன், அரக்கோணம் ஒன்றியக்குழு துணைத்தலைவா் வீரா புருஷோத்தமன், அதிமுக நிா்வாகிகள் பாபு, ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.