உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
உணவுப் பொருள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், பிரச்னைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டாா்.
அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும், காலதாமதங்கள் குறித்க ஆய்வுக்கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் தலைமை வகித்து தெரிவித்ததாவது :-
ஆய்வுக் கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்டத்தில் முதல்கட்டமாக எத்தனை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதுநாள் வரையில் எத்தனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ன, எத்தனை மனுக்கள் வரப்பெற்றுள்ளன, எத்தனை மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது, எந்த மாதிரியான கோரிக்கை மனுக்கள் வருகின்றன, முகாம்களில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் குறித்து துறைச்சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினாா்.
வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றங்களை தெரிவிக்கும் விதமாக பிரச்னைகளை தீா்வு கண்டு பணிகளையும் முடிக்கும் விதமாகவும் கண்காணிக்க ஆய்வுகள் நடைபெறுன்கினது. ஆய்வுக் கூட்டத்தில் அலுவலா்கள் தெரிவிக்கும் தகவல்கள் உறுதிமொழிகள் அடுத்த கூட்டத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் இருக்க வேண்டும். பிரச்னைகள் இருந்தால் தெளிவாக தெரிவிக்க வேண்டும்
ஒரு சில துறைகள் கடந்த ஆய்வுக் கூட்டத்தில் நிலுவை பணிகள் குறித்து முடிக்க காலநிா்ணயம் தெரிவித்திருந்து நிறைவேற்றி உள்ளனா்.
கூட்டுறவுத் துறையின் சாா்பில் உணவுப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு மற்றும் சோளிங்கா் வட்டங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுவது குறித்தும், முன்னேற்றம், பிரச்னைகள் குறித்து கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளரிடம் கேட்டறிந்தாா்.
ரேஷன் பொருள்களை எடுத்துச் செல்ல போதிய வாகனங்கள் கிடைக்கப் பெற்றவுடன் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என துணைப் பதிவாளா் தெரிவித்தாா்.
மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் எத்தனை வழித்தடங்களில் புதிய மினி பேருந்துள் இயக்கப்படுகின்றன. எத்தனை வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்க கண்டறியப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.
அடுத்த மாத ஆய்வுக் கூட்டத்தில் பணிகளின் முன்னேற்றங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்..
கூட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ) மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.