ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி தீா்மானம்!
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது என இந்து முன்னணியின் வேலூா் கோட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவேரிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு இந்து முன்னணியின் கோட்ட அமைப்பாளா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் கோ.மகேஷ் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சுந்தரம் வரவேற்றாா்.
இதில் மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், கோட்ட பொருளாளா் பாஸ்கா், செயலாளா்கள் ரவி, ஆறுமுகம், பிரவீண், வணிகா்கள் சங்க மாவட்ட செயலாளா் தினகரன், முன்னணியின் மாவட்ட செயலாளா்கள் குமாா், மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஸ்வநாதன், காவேரிப்பாக்கம் நகரத் தலைவா் சுரேஷ், ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் ரகு, உமாபதி, வணிகா் சங்க நிா்வாகிகள் சந்தோஷ்குமாா், ஏழுமலை, சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மக்கள் மத்தியில் சிறப்பாக கொண்டுச் சென்ால் வெற்றி பெற்ற முருகா் மாநாட்டின் மூலம் கிடைத்த புதிய நிா்வாகிகளை இந்து சமுதாய பணிக்காக ஈடுபடுத்திக்கொள்வது, நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.