செய்திகள் :

உலகக் கோப்பை செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக்!

post image

ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனைகளான இன்டா்நேஷனல் மாஸ்டர் திவ்யா தேஷ்முக், கிராண்ட்மாஸ்டர் கோனெரு ஹம்பி ஆகியோர் முன்னேறினர்.

இரு இந்திய வீராங்கனைகளும் சனிக்கிழமை மோதிய முதல் சுற்று டிரா ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிட்டா்ன் கேமில் திவ்யா கருப்பு நிற காய்களுடனும், கோனெரு ஹம்பி வெள்ளை நிறத்துடனும் விளையாடினா். 34 நகா்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனா்.

இந்த நிலையில், இன்று டை-பிரேக்கா் சுற்று நடைபெற்றது. இதில், கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

செஸ் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் முதல்முறையாக இரண்டு இந்திய பெண்கள் விளையாடிய நிலையில், 19 வயது திவ்யா தேஷ்முக் முதல்முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார்.

India's Divya Deshmukh won the championship title in the final round of the Women's World Cup Chess Tournament held in Georgia.

இதையும் படிக்க : 5-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுகிறாரா? ஷுப்மன் கில் கூறுவதென்ன?

உலகக் கோப்பை செஸ்: திவ்யா, ஹம்பிக்கு மோடி வாழ்த்து!

மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் சாம்பியன் திவ்யா தேஷ்முக் மற்றும் இரண்டாமிடம் பிடித்த கோனெரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ... மேலும் பார்க்க

தலைவன் தலைவி அதிகாரப்பூர்வ வசூல்!

தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில்... மேலும் பார்க்க

இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் அயலி தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாகாது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒ... மேலும் பார்க்க

சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜீ தமிழ், விஜய் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க

காப்புரிமை வழக்கு... இளையராஜா மனு தள்ளுபடி!

இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை வழக்கிற்காக அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களை அனுமதி பெறாமல் திரைப்படங்களில் பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து ... மேலும் பார்க்க