இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் அயலி தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாகாது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாதங்களில் வரும் பண்டிகைகளுக்கு ஏற்ப தொடர்களிலும் திரைக்கதைகள் மாற்றி அமைக்கப்படுவதால், பெண்கள் பலரையும் இந்தத் தொடர்கள் கவர்ந்துள்ளன. தற்போது ஆடி மாதத் திருவிழா, அம்மன் வழிபாடுகளை மையப்படுத்தி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
அவ்வபோது, புதிய தொடர்களின் வருகை காரணமாக ஏற்கெனவே ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இதேபோன்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கள் வாரத்தில் 5 நாள்களுக்கு பதில் 6 நாள்களாக ஒளிபரப்பப்படுவதும் வழக்கமானது.
அந்தவகையில் ஜீ தமிழின் அயலி மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய இரு தொடர்களும், இனி சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகவுள்ளதாக தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அயலி தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கும், கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?