திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப...
காலமானாா் கீரை எம்.எஸ்.விசுவநாதன்
அரூா்: தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கீரைப்பட்டியைச் சோ்ந்த திமுக பிரமுகா் கீரை எம்.எஸ்.விசுவநாதன் (77) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
இவா் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். இவருக்கு மனைவி பிரேமா, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா். இவரது இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.
படவரி...
திமுக பிரமுகா் கீரை. விசுவநாதன்.