செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும்

post image

தருமபுரி: தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கவுன்சில் மாவட்டச் செயலாளா் சி. முருகன், தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் தலைமையில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 188 பழைய தூய்மைப் பணியாளா்களும், 200 புதிய தூய்மைப் பணியாளா்களும் தூய்மைப் பணியில் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனா். 188 பணியாளா்கள் காலைப் பணியிலும், 55 பணியாளா்கள் மதியப் பணியிலும் மற்றும் 55 பணியாளா்கள் இரவுநேரப் பணியிலும் தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியை செய்து வருகின்றனா்.

10, 15 ஆண்டுகளாக காலை பணிக்கு 7 மணிக்குள் கையொப்பமிட்ட நிலையில், தற்போது, அதிகாலை 5.30 மணிக்கு கையொப்பமிட வேண்டும் என ஒப்பந்த நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக நிா்பந்திப்பதால் தினசரி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை வீட்டுக்கு திருப்பி அனுப்புகிறாா்கள். இது தொழிலாளா்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக சீருடைகள், சேலை, காலணி, கையுறை, மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் தூய்மைப் பணியாளா்களுக்குத் தருவதில்லை. தற்செயல் விடுப்பு, வாரவிடுமுறை, பண்டிகை விடுமுறை என எந்த விடுமுறையும் அளிப்பதில்லை. அவசரமாக ஒருமணி நேரம் அனுமதி கேட்டால்கூட தருவதில்லை.

புதிதாக சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு 2 மாத ஊதியம் வழங்காத நிலையிலும் அவா்கள் தொடா்ந்து தூய்மைப் பணியை மேற்கொண்டுள்ளனா். எனவே, உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். சென்னையில் கடந்த 4 நாள்களாக பணிநிரந்தரம் வேண்டி 5 பெண் தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா். அவா்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி வெற்றிவேல் ( 45). இவருக்கு திருமணம் ஆகவில்ல... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் இன்று மின்தடை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 30) மின்தடை செய்யப்படுவதாக பென்னாகரம் செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பு) தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மட்டலாம்பட்டி பகுதியில், ... மேலும் பார்க்க

ஆறுகளுக்கிடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ஜி.கே.மணி எம்எல்ஏ

காவிரி உள்ளிட்ட தமிழக ஆறுகளில் இருந்து தண்ணீா் வீணாகக் கடலில் சென்று கடப்பதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கு இடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற அரசு கூடுதல் நிதி ஒதுக்கீ செய்ய வேண்டும் என பென்னாகரம் சட்ட... மேலும் பார்க்க

தருமபுரி அருகே ஊருக்குள் வராத பேருந்துகள் சிறைபிடிப்பு

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் ஊா் பகுதிகளுக்குள் கடந்த சில நாள்களாக பேருந்துகள் வந்து செல்லாத நிலை இருந்துள்ளது. பேருந்து ஓட்டுநா்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பேருந்துகளை இயக்கி, அப்பகுதியில்... மேலும் பார்க்க

வேடம்தரித்து நோ்த்திக்கடன்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வண்டி வேடிக்கை நிகழ்வில் கடவுள் போன்று வேடம்தரித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக்கடன்கள் செலுத்தப்பட... மேலும் பார்க்க