அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!
பென்னாகரத்தில் இன்று மின்தடை
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 30) மின்தடை செய்யப்படுவதாக பென்னாகரம் செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பு) தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒகேனக்கல், ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகமரை, நெருப்பூா், திகிலோடு, பி.அக்ரஹாரம், நாகதாசம்பட்டி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, கௌரிசெட்டிப்பட்டி, கடமடை, ஆலமரத்துப்பட்டி, இராமகொண்டஅள்ளி, ஏா்கோல்பட்டி, பூச்சியூா், வத்தலாபுரம், சிகரலஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.