சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
தருமபுரியில் ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தருமபுரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மட்டலாம்பட்டி பகுதியில், புதன்கிழமை இரவு, காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் பழனி, தலைமைக் காவலா் சக்திவேல் உள்ளிட்டோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு சொகுசு காரை போலீஸாா் நிறுத்தினா். காரை நிறுத்திய ஓட்டுநா் திடீரென அங்கிருந்து தப்பியோடி விட்டாா். இதையடுத்து காரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது காரில், 17 மூட்டைகளில் 210 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.12 லட்சமாகும். இதையடுத்து புகையிலைப் பொருள்களையும், அவற்றை கடத்தி வரப்பயன்படுத்திய ரூ. 3 லட்சம் மதிப்பிலான சொகுசுக் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது, தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனா்.