கங்கைகொண்ட சோழபுரம்: திமுக - பாஜகவின் அரசியல் ஆதாய நாடகம்! விஜய் விமர்சனம்
மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதங்களுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வெள்ளநீர் முதல் நான்கு மதகுகள் வழியாக வெளியேற்றப்படவில்லை.
மீதம் உள்ள 12 மதகுகள் வழியாக மட்டுமே வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. நான்கு மதகுகளில் தண்ணீர் வெளியேற்ற படாத நிலையில் உபரி நீர் போக்கி மதகுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு செய்தார். அணையின் வலது கரை, இடது கரை, உபரி நீர் போக்கி, சுரங்க கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசும் போது, கடைமடை வரை தண்ணீர் வந்து சேரவில்லை என்று கூறுவது சரியானது அல்ல. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்ட மக்கள் தண்ணீரை குறைக்க வலியுறுத்துகின்றனர். மேட்டூர் அணை கட்டுமான பணி துவங்கி நூறாண்டுகள் நிறைவடைவதால் நினைவுத்தூண் கட்டுவதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேட்டூர் அணை பூங்காவை புனரமைக்க அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
நீர் வரத்து தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதே நிலையில் நீர்வரத்தை கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்பூர் சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மேட்டூர் அணை வலுவாக உள்ளது. எங்கெங்கு மராமத்து பணிகள் நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் மராமத்து பணிகள் நடைபெறும் என்றார். ஆய்வின்போது மேல் காவிரி வழிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற் பொறியாளர் மதுசூதனன் உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.