செய்திகள் :

இதுவரை ஏன் எதிர்க்கவில்லை? - நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

post image

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. இதனிடையே நீதிபதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் பதவி நீக்கத்துக்கு எதிராக இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி, 'பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றால் உள் விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையில் நீங்கள் ஏன் ஆஜரானீர்கள்? இப்போது அதை எதிர்ப்பது ஏன்? விசாரணை அறிக்கை எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதுவரை ஏன் எதிர்க்கவில்லை? விசாரணை குறித்தும் தீ விபத்து, பணம் கைப்பற்றப்பட்டது குறித்தும் நீங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை' என்று கூறினர்.

முன்னதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், 'அரசியலமைப்பின் 124-வது பிரிவின்படி மட்டுமே ஒரு நீதிபதியை நீக்க முடியும். ஒரு உள் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீக்க முடியாது' என்று வாதிட்டார்.

எனினும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பு தங்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Supreme Court asks Justice Yashwant Varma, Why did you appear before in-house Committee if it was unconstitutional?

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க