செய்திகள் :

Coolie: "இங்குதான் என் பயணம் ஆரம்பித்தது" - கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

post image

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.

இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கூலி பட ரிலீஸின் புரோமோஷன் வேலைகளில் இறங்கிவிட்டார். பல யூடியூப் சேனல்களுக்கு, பத்திரிகைகளுக்கு நேர்காணல் கொடுத்தவர், இப்போது தான் படித்த கோவை PSG கல்லூரில் கூலி பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காகச் சென்றிருக்கிறார்.

அங்கு தான் படித்த வகுப்பறைக்குச் சென்று பென்சில் உட்கார்ந்த தனது கல்லூரி கால நினைவுகளை ரீவைண்டு பண்ணி ரசித்திருக்கிறார். அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் லோகேஷ், "என்னோட கற்றல் பயணம் எங்கே ஆரம்பித்ததோ அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன். 'கூலி' பட புரோமோஷனுக்காக என்னோட PSG காலேஜுக்கு வந்திருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Nithya Menen: ``உண்மையான மனிதர்கள் எல்லா வடிவங்களிலும் வருகிறார்கள்'' - உடல் குறித்து நித்யா மேனன்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நித்யா மேனன்கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொ... மேலும் பார்க்க

``முதல்வரின் மருத்துவ அறிவின் மீது நம்பிக்கை இருக்கிறது" - முதல்வரை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

மறுமணம் செய்து கொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்? - வைரலாகும் ஆடை வடிவமைப்பாளரின் பதிவு!

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். தற்ப... மேலும் பார்க்க