செய்திகள் :

Nithya Menen: ``உண்மையான மனிதர்கள் எல்லா வடிவங்களிலும் வருகிறார்கள்'' - உடல் குறித்து நித்யா மேனன்

post image

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

நித்யா மேனன்
நித்யா மேனன்

கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடுகின்றன. 'கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற ஸ்டீரியோ டைப்பை உடைத்து, தனக்கான கதைக் களத்தை தேர்வு செய்வதில் நித்தியா மேனன் தொடர்ந்து வெற்றிப்பெற்று வருகிறார் என்பதற்கு, தலைவன் தலைவி ஒரு சிறந்த உதாரணம்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், ``நடிகை என்றால் ஒல்லியாகத்தான் தோற்றமளிக்க வேண்டும் என்றக் கடுமையான அழுத்தம் இருக்கும் ஒரு துறையில், எல்லோரும் கவனிக்கும் மேலோட்டமானதைக் கடந்து வேறு ஏதாவது ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அது எனக்கு மிகவும் முக்கியம். மக்கள் உணர்ச்சியின், ஆன்மாவின் தாக்கத்தை உணரும் வகையில் நடிப்பது அவர்களின் கண்களை மட்டுமல்ல, இதயத்தையும் தாக்கும். அதுதான் எனக்கு முக்கியம்.

நித்யா மேனன்

என் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் தோற்றமளிப்பது பற்றியது அல்ல. அதை அழகாகச் செய்பவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிக்க விரும்புகிறேன். உண்மையான மனிதர்கள் எல்லா வடிவங்களிலும் வருகிறார்கள். நாம் அனைவரும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லை, நாம் அப்படி இருக்கவேண்டியதுமில்லை. நான் யதார்த்தமான படங்களை உருவாக்க, உண்மையான தோற்றத்தில் தோன்றுவது முக்கியம். தலைவன் தலைவி படத்தில் எனக்கென ஒரு மேக்கப் மேன் கிடையாது. எப்படி இருக்கிறேனோ அப்படியே நடித்தோம்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``முதல்வரின் மருத்துவ அறிவின் மீது நம்பிக்கை இருக்கிறது" - முதல்வரை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

மறுமணம் செய்து கொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்? - வைரலாகும் ஆடை வடிவமைப்பாளரின் பதிவு!

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். தற்ப... மேலும் பார்க்க

Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனலாக பேசிய பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவான 'தலைவன் தலைவி' படம் நேற்று (ஜுலை 25) திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, நித்... மேலும் பார்க்க