அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா
``இந்தி மாநிலங்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" - எம்.பி மனோஜ் குமார் ஜா
டெல்லியின் இந்திய சர்வதேச மையத்தில் ஆய்வாளர் கசாலா வஹாப்பின் "தி ஹிந்தி ஹார்ட்லேண்ட்" வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.ஜே.டி கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, ``இந்தியாவின் 38 சதவிகித நிலப்பரப்பை உள்ளடக்கிய வடக்கில் உள்ள ஏழு மாநிலங்களில், அரசியல் காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திய வகுப்புவாத பதற்றம், பொருளாதார பின்தங்கிய நிலை, பன்முகத்தன்மையில்லா சூழல் ஆகியவை சிக்கலாக மாறியிருக்கின்றன.
இந்தியா என்ற கருத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், 'இந்தி ஹார்ட்லேண்ட்' சில நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவைப் குறித்தப் பொதுவான கருத்து இந்தி ஹார்ட்லேண்ட்-லிருந்தே வருகிறது.
இரண்டு மதங்களுக்கு மத்தியில் இருக்கும் சகிப்புத்தன்மை என்பது நல்லொழுக்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாகும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. சந்தர்ப்பவாத வரலாற்றின் யுகத்தில், சகிப்புத் தன்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் மொழிப் போர்கள் நடத்தப்படுகின்றன. இந்தி திணிப்பு என்பது செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் கூட ஒரு நீடித்த பயமாகவே இருக்கிறது.
இருப்பினும், இந்தி நகைச்சுவையுடனும், பிரபல கலாசாரத்துடனும் நெருங்கிய தொடர்புடையது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிலிருந்து ஏராளமான மொழிபெயர்ப்புகள் வருகிறது. குறிப்பாக இந்தி, தமிழ் மொழிகளிலிருந்து வருகிறது. இதற்கு அரசு இந்த மொழிகளை விரும்புகிறது என்பது பொருளல்ல. இந்த மொழிகளை மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் செய்தி” என்றார்.