Rajendra Balaji: “என்னைக் குறி வைக்கின்றனர்” - கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி; என்ன நடந்தது?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.
சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (ஜூலை 28) கலந்து கொண்டு பேசியிருக்கிறார். கூட்டத்தில் பேசிய அவர், "பழனிசாமியின் பிரசார முகமாக இருப்பதால் என்னைக் குறிவைக்கின்றனர். என்னை மிரட்டிப் பணிய வைக்க திமுக முயல்கிறது.
.jpg)
திமுக ஆட்சியில் என் மீது குறி வைத்துப் பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். ஆனால் வரும் தேர்தலில் என்னை எதிர்த்து யார் நின்றாலும் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன். சிவகாசியில்தான் நிற்பேன். என்னைச் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது, அமைச்சர் ஆக்கியது எல்லாம் இந்தத் தொகுதிதான். இங்கேதான் போட்டியிடுவேன்" எனக் கண்ணீர் மல்க ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார்.