செய்திகள் :

"ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" - கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன?

post image

விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ராஜேந்திர பாலாஜி

ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்

அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "பண மோசடி வழக்கில் தன்னை திமுக அரசு கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள்.

நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். என்னைச் சிறைக்குள் தனிமைச் சிறையில், இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்துப் பணிய வைக்க நினைத்தார்கள்.

ஆனால் நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன் ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனத் தெரிவித்துவிட்டேன்.

சிறையில் வைத்து என்னை அடிபணிய வைப்பதற்கு ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். எதற்கும் நான் அஞ்சவில்லை என்ற ஆதங்கத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது" எனப் பேசிக்கொண்டே இருக்கையில் அழத் துவங்கியவர், “எப்பொழுதும் கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை" எனக் கண்ணீர் மல்கப் பேசினார்.

ராஜேந்திர பாலாஜி

"யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். என்னை இரு முறை அமைச்சராக்கிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன்" எனச் சூளுரைத்தார்.

வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 3 கோடி வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 16 நாள் தலைமறைவிற்குப் பின் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Gaza: பாலஸ்தீனம் ஐநாவில் அங்கீகரிக்கப்படுமா... பிரான்ஸின் நகர்வும், அமெரிக்காவின் அழுத்தமும்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் மனிதாபிமான கேள்விகளைத் தீவிரமாக எழச் செய்துள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் முதல் ஜி 7 நாடாக, ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் எனத் தெரிவித்தது. தொடர்ந்... மேலும் பார்க்க

Modi: "ட்ரம்ப் முன்னாடி 56 இன்ச் மார்பு 36-ஆக சுருங்கிடுது" - மோடியை மக்களவையில் விமர்சித்த TMC MP

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

"காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்" - கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவ... மேலும் பார்க்க