செய்திகள் :

பாக்கியலட்சுமி வெறும் தொடர் அல்ல; பாடம்: நடிகை நேகா நெகிழ்ச்சி

post image

பாக்கியலட்சுமி வெறும் தொடர் மட்டுமல்ல; மறக்க முடியாத நினைவுகளுடன் கூடிய பாடம் என நடிகை நேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாக்கியலட்சுமி தொடருடன் பணியாற்றியுள்ளதாகவும், நடிப்பின் மீதான ஆர்வத்தை உணர்ந்ததும் இந்த படப்பிடிப்பு தளத்தில்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்தொடர் குறித்து பல சர்ச்சைகள் மற்றும் பல விமர்சனங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் எழுந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் இருந்து வருகிறது.

இத்தொடரில் நடித்த பலரும் மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்து, தற்போது திரைப்படங்களிலும் நடிக்கத்தொடங்கியுள்ளனர். இத்தொடரில் பாக்கியலட்சுமிக்கு மகளாக இனியா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நேகா, தொடர் முடிவது குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி தொழில்நுட்பக் குழுவினருடன் நேகா

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பயணித்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். இது வெறும் தொடர் மட்டுமல்ல; ஒரு பயணம். இந்த இடம் வீடாக மாறியுள்ளது. இந்த மக்கள் எனது குடும்பமாக மாறியுள்ளனர். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

இது எளிமையான விஷயம் அல்ல. மிக நீண்ட இரவு, கடினமான நாள்கள், மறுஒளிப்பதிவு மற்றும் சந்தேகங்கள் என பல. ஆனால், அது மட்டுமல்ல சிரிப்பு, வளர்ச்சி, நடிப்பின் மீது காதல் ஏற்படுத்திய அதிசயம் மற்றும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என பலவற்றை பாக்கியலட்சுமி தொடரில் பெற்றுள்ளேன்.

இன்று இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து இறுதியாக வெளியேறுகிறேன். இந்த தொடரில் இருந்து நான் வெளியேறினாலும், நினைவுகளையும், பாடங்களையும் என்னுடனேயே எடுத்துச்செல்கிறேன்.

சிறுமியாக இந்தத் தொடரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தேன், இப்போது ஒரு பெண்ணாக நான் மாற்றி என்னை அனுப்புகிறாள் பாக்கியலட்சுமி. இந்தக் கதையில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Actress Neha Lainichi has said that Bhagyalakshmi is not just a serial; it is a lesson with unforgettable memories.

கங்கைகொண்ட சோழபுரம்: திமுக - பாஜகவின் அரசியல் ஆதாய நாடகம்! விஜய் விமர்சனம்

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் விவகாரத்தில் திமுக, பாஜகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிச... மேலும் பார்க்க

நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்

திருநெல்வேலியில் ஆணவப் படுகொலைச் சம்பவத்தில், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் த... மேலும் பார்க்க

சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்: ராஜேந்திர பாலாஜி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர்

புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பி... மேலும் பார்க்க

திருச்சியில் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!

திருச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் பிரபல கேம்பியன் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 90 மாணவர்கள் பயின்றனர், அவர்கள் அங... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அட... மேலும் பார்க்க