செய்திகள் :

14 ஆண்டுகளுக்குபிறகு மாதோஸ்ரீ இல்லத்தில் ராஜ் தாக்கரே... உத்தவ் தாக்கரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post image

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு நேற்று பிறந்தநாள். இதனையடுத்து சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி உத்தவ் தாக்கரே தனது பிறந்தநாளினை கொண்டாடினார். உத்தவ் தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி ராஜ் தாக்கரே மாதோஸ்ரீ இல்லத்திற்கு வந்தார். அவர் உத்தவ் தாக்கரேயிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சேர்ந்து பால்தாக்கரே புகைப்படத்திற்கு முன்பு நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

ஒன்றாக இருப்பதற்குத்தான் ஒன்றாக சேர்ந்துள்ளோம்!

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ``நாங்கள் ஒன்றாக இருப்பதற்குத்தான் ஒன்றாக சேர்ந்துள்ளோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்''என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரேயுடன் அவரது கட்சி நிர்வாகிகள் பாலாநந்த்காவ்கர், நிதின் சர்தேசாய் ஆகியோரும் வந்திருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயை எதிர்த்து நிதின் சர்தேசாய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் தாக்கரே கடைசியாக 2012-ம் ஆண்டு பால் தாக்கரே இறந்தபோது மாதோஸ்ரீ இல்லத்திற்கு வந்தார். அதன் பிறகு ஒருபோதும் ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வரவில்லை. ராஜ் தாக்கரே கடந்த 2005ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடனான அதிகாரப்போட்டி காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒரு போதும் சந்தித்துக்கொண்டதில்லை. தற்போது இந்தி திணிப்பு பிரச்னை வந்த போது உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

இதையடுத்து மாநில அரசு இந்தி திணிப்பை கைவிட்ட போது ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். இதையடுத்து அடுத்து நடக்க இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனாவும் கூட்டணி அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை கூட்டணி குறித்து பேசாத உத்தவ் தாக்கரே முதல் முறையாக ராஜ் தாக்கரேயுடன் இணைந்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rajendra Balaji: “என்னைக் குறி வைக்கின்றனர்” - கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி; என்ன நடந்தது?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்ன... மேலும் பார்க்க

Op Sindoor : `பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மிடம் பேசினார்கள்’ - ராஜ்நாத் சிங் முழு உரை

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க

``இந்தி மாநிலங்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" - எம்.பி மனோஜ் குமார் ஜா

டெல்லியின் இந்திய சர்வதேச மையத்தில் ஆய்வாளர் கசாலா வஹாப்பின் "தி ஹிந்தி ஹார்ட்லேண்ட்" வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.ஜே.டி கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார்... மேலும் பார்க்க

Operation Mahadev: ``ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..'' - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தி, பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. மே 7-ம் தேதி தொடங்கிய இந்த... மேலும் பார்க்க

``நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி'' தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்

'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' - இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வரும் ஒரு விஷயம். அவர் இப்படி கூறிய கூற்றின் எண்ணிக்கை 25-ஐ தாண்டி விட்டது.மோடி - ட... மேலும் பார்க்க

``நாட்டின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது'' - மோடி

கங்கை கொண்ட சோபுரத்தில் நடைபெற்ற இராஜேந்திர சோழன் திருவாதிரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள பொன்னேரியில் அ... மேலும் பார்க்க