'EPS-MODI' ஸ்கெட்ச்... பதிலடியாக Vijay மூலம் OPS தரும் சவுத் ஷாக்! | Elangovan E...
நடிப்புச் சக்கரவர்த்தி... காந்தா டீசர்!
துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. துல்கரும் ராணா டக்குபதியும் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் காந்தா திரைப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசர் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.