பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம்களை, ஆட்சியா் பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவேற்றப்படுவதை ஆய்வு செய்தாா். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வேண்டி விண்ணப்பித்தவருக்கு உடனடியாக பதிவு செய்யப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கினாா்.
மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 1,573 மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் கோவிந்தராஜ் , உடையாா்பாளையம் ஷீஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டாட்சியா்கள் முத்துலெட்சுமி, சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.