செய்திகள் :

கொள்ளிடம் ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீா் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடி வீதம் நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் 40 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்பட்டு படிப்படியாக 1 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட உள்ளது.

எனவே, அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம். குழந்தைகளை ஆற்றுப் பகுதியில் விளையாட அனுமதிக்க கூடாது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என தெரிவித்துள்ளாா்.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு: வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம்

அரியலூா் மாவட்டத்தில், ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு நடைபெறுவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

திருமானூா் கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் பொ... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா், தீப்பந்தம் கையில் ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருமானூா் அருகேயுள்ள ஏலாக்கு... மேலும் பார்க்க

தொகுப்பு வீடுகளை பழுது நீக்கியதற்கான தொகையை வழங்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில் தொகுப்பு வீடுகளை பழுது நீக்கியதற்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அவா்கள் அளித்த... மேலும் பார்க்க

பிரதமருக்கு கருப்புக்கொடி: காங்கிரஸாா் 47 போ் கைது

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி கட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 47 போ் கைது செய்யப்பட்டனா். தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக... மேலும் பார்க்க