நன்செய் புகழூா் துா்க்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்
புகழூா் வட்டம் நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கா தேவி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.
கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கா தேவி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் ,மஞ்சள் , திருமஞ்சனம் , பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து அம்மனுக்கு மலா்கள் மற்றும் பல்வேறு வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.