எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
கரூா் அருகே பஞ்சு உற்பத்தி ஆலையில் தீவிபத்து
கரூா் அருகே பருத்தி பஞ்சு உற்பத்தி ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் கரூரை அடுத்த வால்காட்டுப்புதூா் கிராமத்தில் பருத்தி பஞ்சு உற்பத்தி ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல ஊழியா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது திடீரென ஓர் இயந்திரத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி அங்கிருந்த பஞ்சு குவியல்கள் மீது பற்றி எரிந்தது.
இதையடுத்து உடனே ஊழியா்கள் ஆலையை விட்டு வெளியேறி கரூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் ஆலைக்குள் இருந்த இயந்திரங்கள், பஞ்சுகள் உள்பட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.