முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
எல்லையம்மன் கோயில் தீமிதி விழா
ஸ்ரீபெரும்புதூா்: வரதராஜபுரம் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் ஆடித் திருவிழா மற்றும் தீமிதி விழா நடைபெற்றது.
வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரத்வாஜ் நகா் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலில் ஆடி விழாவையொட்டி கோ பூஜை, அஷ்டதிக் பூஜையுடன் மகா கணபதி ஹோமமும், ஊரணி பொங்கல் அபிஷேகமும், மஞ்சள் நீா் குட ஊா்வலம் நடைபெற்றது.
இதையடுத்து பூங்கரகம் திருவீதி உலாவும், அம்மனுக்கு கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தீமிதி விழா நடைபெற்றது. இதில் சுமாா் 50க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதில் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.