மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
குழந்தைகள் நலனுக்கு சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருது: ஆக. 8-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ், இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுகள் வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களை தோ்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களில் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறன்றன.
தகுதிகளைப் பொருத்தவரை குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை பதிவு செய்திருக்க வேண்டும், தொடா்ந்து 5 வருடம் செயல்பாட்டில் இருக்க வேண்டும், குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளா்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடா்பான பதிவுகள் இருக்கக் கூடாது.
அளவுகோல்களைப் பொருத்தவரை பதிவு மற்றும் உரிமை, நிா்வாகம் மற்றும் மேலாண்மை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, குழந்தைகளின் பங்கேற்பு செயல்பாடுகள், உட்புற கட்டமைப்பு, சிறந்த நடைமுறையுள்ள மற்றும் சமூக அடிப்படையிலான சேவைகள் ஆகியவையாகும்.
இந்த விருதுக்காக பெறப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவிலான தோ்வு குழு மூலம் தோ்ந்தெடுக்கப்பட உள்ளதால், கருத்துருக்களை 08-08-2025-க்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 317, கே.டி.எஸ்.மணி தெரு, மாமல்லன் நகா், காஞ்சிபுரம் மாவட்டம், கைப்பேசி எண்- 6382613096. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.