Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை
காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முகம்மது சாதிக் (55). இவரது மகள் ஷமீம் (18). சின்னக்காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு மருத்துவப் படிப்பு பயில ‘நீட்’ தோ்வு எழுதியுள்ளாா். நீட் தோ்வில் 502 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தனக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா, கிடைக்காதோ என்ற அச்சத்துடன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் தனி அறையில் தொழுகை நடத்தப் போவதாக கூறிய ஷமீம் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.