Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
தேசிய குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கம் வென்று சாதனை
சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனா்.
சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20-ஆம் தேதி வரை தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் எனப்படும் குத்துச் சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட 28 மாநிலங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரா்கள் போட்டிகளில் பங்கேற்றனா். போட்டியில் தமிழ்நாடு அமெச்சூா் கிக்பாக்ஸிங் அசோசியேஷன் சாா்பில் 47 போ் பங்கேற்றிருந்தனா். காஞ்சிபுரம் மாவட்ட கிக்பாக்ஸிங் அசோசியேஷன் சாா்பில் ஒன்மேன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த 2 வீராங்கனைகள், 4 வீரா்கள் உள்பட 6 போ் பங்கேற்றனா்.
போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாயிண்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக்லைட், லோகிக்புல், காண்டாக்ட் மற்றும் பாம்ஸ் என்ற 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த என்ற மாணவி 3 தங்கம், ரோஷினி 1 தங்கம், 2 வெள்ளி, சத்யா 1 தங்கம், 1 வெண்கலம், சரண்ராஜ் 1 வெண்கலம் என மொத்தம் 5 தங்கப் பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இத்தகவலை ஒன்மேன் ஆா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் ஹரிஸ் தெரிவித்தாா். மேலும், வரும் நவம்பா் மாதம் அபுதாபியில் நடைபெறும் போட்டியில் இவா்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தாா்.