தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணிக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
உத்தரமேரூா் தொகுதிக்குட்பட்ட ஓரிக்கை மாரியம்மன் கோயில் தெருவில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 260 மீ நீளத்திற்கு கான்கிரீட் மழைநீா் வடிகால் வாய் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. எம்எல்ஏ.சுந்தா் அடிக்கல் நாட் டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினா் கயல்விழி கலந்து கொண்டனா்.