பாலாற்று மேம்பாலத்தில் சாலை சீரமைப்பு
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிய சாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் சுமாா் ஒரு கி.மீ. மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் தரைப்பகுதி பல இடங்களில் பழுதடைந்ததன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.
காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினா் மேம்பாலத்தின் தரைப்பகுதியில் உள்ள சேதங்களை செப்பனிடும் வகையில் புதிதாக தாா் சாலை அமைத்துள்ளனா்.