எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமம் பெரியசாமி கோயில் பின்புறம் வசித்து வந்தவா் கருப்பண்ணன் மகன் ஆனந்தன் (55). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது விவசாய நிலத்தில் உழவுப் பணிக்காக டிராக்டா் ஓட்டிக்கொண்டிருந்த ஆனந்தன் நிலைதடுமாறி அங்குள்ள விவசாய கிணற்றில் டிராக்டருடன் விழுந்துவிட்டாா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கினற்றுக்குள் இறங்கி 3 மணி நேரத்துக்குப் பிறகு டிராக்டரையும், உயிரிழந்த ஆனந்தின் உடலையும் மீட்டனா்.
பின்பு, ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச் சம்பவம் குறித்து கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.