Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
பெரம்பலூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் (குற்றவியல்) சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவரும், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான முருகானந்தம் என்பவரை, கடந்த 28-ஆம் தேதி சமூக விரோதிகள் கொலை செய்தனா். மேலும், அச் சம்பவத்தில் தாம்பரம் நீதிமன்ற வழக்குரைஞா் ரகுராமன் தாக்கப்பட்டுள்ளாா். இச் சம்பவங்களைக் கண்டித்தும், தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.