எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
5 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) முதல் ஆக. 3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாறு மற்றும் நடுவட்டம் (நீலகிரி) -தலா 40 மி.மீ. மழையும், சோலையாறு (கோவை) - 30 மி.மீ. மழையும் பதிவானது.
வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும், மதுரை நகரம் - 102.92, நாகப்பட்டினம் - 101.66, தஞ்சை - 100.4, ஈரோடு - 100.04 என மொத்தம் 5 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.