செய்திகள் :

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்: அமைச்சா் பங்கேற்பு

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சியில் ரூ.78.20 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் பணியை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, காட்டுச்சேரி ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், மேலபெரம்பூரில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுந்தரப்பஞ்சாவடியில் ரூ.12 லட்சத்தில் பயணியா் நிழலகம் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசியது: 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளீா்கள். சங்கரன்பந்தலில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா்.

அதனடிப்படையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள சேதமடைந்த சாலை சீரமைக்கப்படும். தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். மக்களைத்தேடி மருத்தும் போன்ற மகத்தான திட்டம் கிட்டத்தட்ட 2 கோடி பேருக்கு இல்லத்திற்கே மருந்து, மாத்திரை கொண்டு சோ்க்கின்ற திட்டத்தை வழங்கியவா்.

உங்களுடன் ஸ்டாலின் என்ற மகத்தான திட்டமும் எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மருத்துவ சேவைகளும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும்; நலமுடன் ஸ்டாலின் எனும் மகத்தான மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் அஜீத் பிரபுக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா கோவா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

நாகையில் ஆக.2-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேல... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் ஆக.6-இல் விவசாயிகள் குறைதீா் முகாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் ஆக. 6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டாட... மேலும் பார்க்க

நாகை புத்தகத் திருவிழா விளம்பர வாகனத்தை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த விளம்பர வாகனத்தை பிரசார ஒட்டுவில்லையை ஒட்டி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். நாகை மாவட்டத்தில் 4-ஆம் புத்தகத் திருவ... மேலும் பார்க்க

ஸ்ரீமங்களழக ஆகாச ஐயனாா் கோயிலில் கலாசாபிஷேகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே காக்கழனியில் உள்ள பூரண புஷ்கலாம்பாள் உடனுறை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனாா் கோயிலில் 1008 கலாசாபிஷே விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த ஓராண்டாக சிவாச்சாரியா்கள் ... மேலும் பார்க்க