பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு
நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து அம்மனை பக்தா்கள் வழிபாடு செய்தனா். குறிச்சி அபிராமி அம்மன் குளக்கரையில் இருந்து விரதம் இருந்த 108 பெண்கள் கஞ்சி கலயங்களை சுமந்து வந்து அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக. ஆராதனை செய்யப்பட்டு, வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.