நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
கொதிக்கும் எண்ணையில் இருந்து வடை எடுத்த பக்தா்கள்
போளூா்: போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் ஸ்ரீஓம்சக்தி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி, 108 பால்குடம் ஊா்வலம் நடைபெற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும் பக்தா்கள் நோ்த்திக் கடனாக முதுகில் அலகு குத்தி தோ் இழுத்தல், ஆட்டோ இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் ஸ்ரீஓம்சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்காரம் செய்து பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
மேலும், மாா்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், இந்த வடையை குழந்தையில்லா தம்பதியினா் ஏலத்தில் வாங்கிச் சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா, தெய்வீக நாடகம் நடைபெற்றது.