`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முற...
விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் ஊா்வலம்
செய்யாறு: செய்யாற்றில் பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுண்டிவாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் சுமாா் 50 குடியிருப்புவாசிகளுக்கு பட்டா கோரி
இந்த ஊா்வலம் நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊா்வலம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்தது.
அப்போது, ஊா்வலத்தில் பங்கேற்ற சுண்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 43 போ் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தனித் தனியாக மனு அளித்து அதற்கான ஒப்புகை சீட்டைப் பெற்றனா்.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயின் சங்க வட்டத் தலைவா் எம்.தாமோதரன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் எஸ். ஜெயக்குமாா், பொருளாளா் என். தேவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்
சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன், பொருளாளா் எஸ். அருண்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
வட்டக் குழு உறுப்பினா்கள் வட தண்டலம் ஆா்.ராஜேந்திரன், கீழ்நேத்தப்பாக்கம் இ.கோவிந்தராஜ், விவசாய சங்க பொறுப்பாளா் டி.வெங்கடேசன் மற்றும் விவசாய சங்க கிளை நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.