Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
மங்கலம் கோயிலில் வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை
ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள அமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுா்வேத சோமநாத ஈஸ்வரா் கோயிலில், ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
அமுதாம்பிகை அம்மனுக்கு 16-ஆம் ஆண்டாக திங்கள்கிழமை நடைபெற்ற வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜையில் பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
பூஜையில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும், நோய் நொடிகள் நீங்கும், குடும்ப பிரச்சினை தீரும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.